தருமபுரி - மார்ச் 11:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் அதிமுக மாநில மருத்துவரணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்றத் தொகுதி நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 10 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு ரூ.500 வீதம் செலுத்தி மொத்தம் 501 குழந்தைகளுக்கு இந்திய அஞ்சல் துறையின் செல்வமகள் மற்றும் செல்வமகன் சேமிப்பு திட்டங்களில் புதிய அஞ்சல் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி அதிமுக மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்திய அஞ்சலக சேமிப்பு புத்தகங்களை வழங்கினார். மேலும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பொண்ணு வேல், பழனிச்சாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் பழனி, சிவப்பிரகாசம், மாணவர் அணி விஸ்வநாதன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural
.gif)

.jpg)