தருமபுரி - மார்ச் 11:
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள அரசு விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இஆப., அவர்கள் இன்று (11.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்களும் உடனிருந்தனர்.
வருகின்ற 13.03.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீர்வளத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பொது நூலகத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட உள்ளன.
அதேபோல் வருவாய்த் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், தாட்கோ, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பால்வளத்துறை, மாவட்ட சமூக நலத்துறை, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இந்த அரசு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்களும் பயனாளிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ. ரூபன் சங்கர் ராஜ், முன்னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன், பொதுப்பணித்துறை செயற்பெறியாளர் பன்னீர் செல்வம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா. காயத்ரி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural
.gif)

.jpg)