Type Here to Get Search Results !

கக்கன் ஜி புரம் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் காங்கிரஸ் மனு கொடுத்தனர்.


தருமபுரி - மார்ச் 11:


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட தடங்கம் ஊராட்சியில் உள்ள கக்கன் ஜி புரம் கிராமத்தின் பெயரை கக்கஞ்சி புரம் என மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


இதுகுறித்து தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கிராமத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் பெயரால் கக்கன் ஜி புரம் என பெயர் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பெயரை மாற்றி கக்கஞ்சி புரம் என மாற்றியுள்ளதாகவும், இது முன்னாள் அமைச்சரின் மாண்பை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் இளைஞர் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.


எனவே, தற்போதைய பெயரை நீக்கி முன்பு இருந்த கக்கன் ஜி புரம் என்ற பெயரையே மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், திருநெல்வேலியில் பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் பாரதமாதா கோயில் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னுயிரை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் பெயரை தருமபுரியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


அதேபோல், தருமபுரி மாவட்டத்தில் பல வாகனங்களில் விதிமுறைக்கு மாறாக கண்களை கூசும் வகையில் எல்இடி பவர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், போக்குவரத்து துறை விதிமுறைகளின்படி அவற்றை பறிமுதல் செய்து, மஞ்சள் நிற முகப்பு விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வெற்றிவேந்தன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies