தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் சரக்கு வாகனம் சாக்கடை கால்வாயில் இறங்கியதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாரண்டஅள்ளி நான்கு ரோடு பகுதியில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அவ்வழியாக சென்ற மினி சரக்கு வாகனம், நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் தவறி இறங்கியது. இதனால் வாகன ஓட்டுநரால் அதை மீண்டும் சாலையில் கொண்டு வர முடியாமல் போனது.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாரண்டஅள்ளி போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் சாக்கடை கால்வாயில் சிக்கியிருந்த மினி சரக்கு வாகனம் வெளியே எடுக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
.gif)

