Type Here to Get Search Results !

காரிமங்கலம் சந்திரா டெய்லரிங் இன்ஸ்டிடியூட் சார்பில் மகளிர் தின விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.


தருமபுரி - மார்ச் 10:


சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சந்திரா டெய்லரிங் இன்ஸ்டிடியூட் சார்பில் மகளிர் தின விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சி நிறுவனத்தின் தலைவர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர் சந்திரமோகன் மற்றும் மாவட்ட தொழில்மைய மேலாளர் கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் அவர்கள் பெண்களின் சமூக முன்னேற்றம் குறித்து பேசினர். தேசிய மற்றும் உலகளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களை நிலைநாட்டி சாதித்து வருகின்றனர் என்பதையும், பெண்கள் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு எடுத்துரைத்தனர்.


மேலும், இந்த நிறுவனத்தின் சார்பில் தங்களது துறையில் சிறந்து விளங்கி சாதனை புரிந்த பெண்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies