Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய நவீன பயணிகள் நிழற்கூடம் திறப்பு.


தருமபுரி - மார்ச் 10:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் காவல் நிலையம் எதிரில் அமைக்கப்பட்ட புதிய நவீன பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார்.


பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, காவல் நிலையம் எதிரில் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இதில் சோலார் வசதி, மின்விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி ரிப்பன் வெட்டி நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, நகர அவைத் தலைவர் அமானுல்லா, கிளை செயலாளர்கள் ராஜீ, கவுன்சிலர்கள் சரவணன், மோகன், பத்தேகான், லட்சுமி ராஜசேகர், வகாப்ஜான், ரூஹித், சாதிக்பாஷா மற்றும் கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies