Type Here to Get Search Results !

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தருமபுரியில் காவல்துறை - துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு தருமபுரியில் நடைபெற்றது.


தருமபுரி - மார்ச் 10:


2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தருமபுரியில் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த அணிவகுப்பை தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் காவல் துணைக் கண்காணிப்பாளர் (மாவட்ட குற்ற ஆவண பதிவறை கூடம்) குணவர்மன், தருமபுரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவராமன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். மேலும், 50 மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் மற்றும் 60 காவல்துறையினர் என மொத்தம் சுமார் 110 பேர் கலந்து கொண்ட இந்த கொடி அணிவகுப்பு தருமபுரி காவல் அலுவலகத்தில் தொடங்கி அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies