இண்டூர் - மார்ச். 20:
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கல்குவாரி தொடர்பான விவகாரத்தில், “கல்குவாரி உரிமையாளரை சுத்துப்போட்ட காட்சி” என தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தி குறித்து காவல்துறை விளக்கம் வழங்கியுள்ளது.
இண்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கும்பளப்பாடி கிராமத்தில் தனியார் கல்குவாரி கிரஷர் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாழ்வாதாரம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற காரணங்களை முன்வைத்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியதால், காவல்துறையினர் தலையிட்டு கிராம மக்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர் ஆகிய இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டு, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பேச்சுவார்த்தை முடிந்த பின், காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட காவல்துறையினர், நிலைமை மோசமடையாமல் தடுத்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில் மனு ரசீது வழங்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)