தருமபுரி – மார்ச் 20:
தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரி சட்டமன்ற தொகுதி பேரவை கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் உரையாற்றிய போது, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அனைத்து நிலை நிர்வாகிகளும் தீவிரமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஈரானில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும், தொழிலாளர் தொடர்பான 44 சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்கமாக பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. மாதையன், சி. பாலன், மாவட்ட பொருளாளர் அலமேலு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவி, பச்சா கவுண்டர் உள்ளிட்டோர் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)