Type Here to Get Search Results !

தருமபுரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிப்பு பணி: அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.


தருமபுரி – மார்ச் 20:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பிரித்து அனுப்பும் பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் நடைபெற்றது.


இந்த பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (20.03.2026) நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள 057-பாலக்கோடு, 058-பென்னாகரம், 059-தருமபுரி, 060-பாப்பிரெட்டிப்பட்டி, 061-அளூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகளில் உள்ள மொத்தம் 1596 வாக்குச் சாவடிகளுக்கு தேவையான Ballot Units, Control Units உள்ளிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்டமாக பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இந்த இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, பின்னர் ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன், GPS வசதி கொண்ட வாகனங்கள் மூலம் இரட்டை பூட்டு முறையில் பாதுகாப்பாக அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் ஐந்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies