Type Here to Get Search Results !

பராமரிப்பு பணிகள் காரணமாக அரூர் பகுதியில் 2 நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் நிறுத்தம். – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, மார்ச். 05:


ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃபுளுரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் பிரதான குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது: ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃபுளுரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் 450, 400 மற்றும் 250 மி.மீ விட்டம் கொண்ட வார்ப்பிரும்பு பிரதான குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக 10.03.2026 மற்றும் 11.03.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரூர் நகராட்சி மற்றும் 32 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.


எனவே, பொதுமக்கள் இந்த இரண்டு நாட்களுக்கு தேவையான அளவு ஒகேனக்கல் குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உள்ளூர் நீராதாரங்கள் மூலம் கிடைக்கும் நீரை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #HogenakkalWater #DrinkingWater #Arur #WaterSupply #TamilNews #LocalNews 


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

📲 சமீபத்திய செய்திகள் உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies