Type Here to Get Search Results !

தேர்தல் செலவினங்கள், வங்கி ரொக்கப் பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி, மார்ச். 05 :


தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு தேர்தல் செலவினங்கள் மற்றும் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் ரொக்கப் பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு (057), பென்னாகரம் (058), தருமபுரி (059), பாப்பிரெட்டிப்பட்டி (060), அரூர் (061) ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு அனைத்து வங்கிகளிலும் மேற்கொள்ளப்படும் ரொக்கப் பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வங்கியாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார்.


மேலும் ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் போது முறையான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்றும், வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடந்தாலும் அல்லது நீண்ட நாட்களாக செயல்படாத கணக்குகளில் திடீரென பரிவர்த்தனை நடந்தாலும் உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு ராமஜெயம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி எஸ். மலர்விழி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு நாகராஜன், மகளிர் திட்ட இயக்குநர் திரு சுந்தர்ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

📲 சமீபத்திய செய்திகள் உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies