தருமபுரி - மார்ச் 13:
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா 13.03.2026 அன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2022–23 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற 79 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் வே. நாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தி, கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், விழாவில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஆர். சங்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏரியூரின் முன்னாள் முதல்வர் முனைவர் க. பாலசுப்பிரமணியன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் சி. நடராஜன் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து விழாவை சிறப்பாக நடத்தினார்.
இந்த பட்டமளிப்பு விழா ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாவது பட்டமளிப்பு விழா என்பது குறிப்பிடத்தக்கது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)