தருமபுரி - மார்ச் 13:
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தருமபுரி ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஆ. மணி மற்றும் பி. பழனியப்பன் தலைமையேற்றனர். இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
கூட்டத்தில் திமுக பொறுப்பாளர்களுடன் இணைந்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் துணை நிர்வாகிகளுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பிரசாரப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டின் மண், மானம், மொழியைக் காக்கும் ஜனநாயகப் போரில் பாசிச மற்றும் அடிமை சக்திகளை வீழ்த்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)