தருமபுரி, ஜூலை 31:
மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027-ன் முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணி, 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடித்தளமாக விளங்கும் மிக முக்கியமான தேசியப் பணியாகும். கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களைத் திட்டமிடுவதற்கு இக்கணக்கெடுப்பின் தரவுகள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, ஒவ்வொரு குடும்பமும் தங்களது உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இப்பணிக்காக 2,376 கணக்கெடுப்பாளர்களும், 399 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர் (Enumerator) உங்கள் இல்லத்திற்கு வரும்போது, அவரின் அடையாள அட்டையை சரிபார்த்து, குடும்பம் மற்றும் வீடு தொடர்பான சரியான தகவல்களை வழங்கி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)