Type Here to Get Search Results !

தருமபுரியில் வாக்கு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.


தருமபுரி - மார்ச். 18:


தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 23 ஏப்ரல் 2026-ஐ முன்னிட்டு, மாணவர்கள் மத்தியில் வாக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் இன்று (18.03.2026) நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கையொப்பமிட்டு துவக்கி வைத்தார். இதில், “100% வாக்களிப்பேன் – என் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற உறுதியை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து,
“நாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, சுதந்திரமான, நியாயமான தேர்தல்களின் கண்ணியத்தை நிலைநிறுத்துவோம்” என்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


📌 முக்கிய நிகழ்வுகள்:

  • கல்லூரி வளாகத்தில் Selfie Point அமைத்து, வாக்கு விழிப்புணர்வு பரப்புதல்

  • தேர்தலில் 100% வாக்களிப்பதற்கான உறுதிமொழி வாசிப்பு

  • மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்பு


இதனைத் தொடர்ந்து, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


📞 தேர்தல் தொடர்பான புகார்களுக்கு: 04342-260038


மேலும், பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இதேபோன்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட அலுவலர் சு. சுந்தர்ராஜன், தேர்தல் அலுவலர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies