Type Here to Get Search Results !

தேர்தல் நேரத்தில் போக்குவரத்து பணிமனைகளில் திமுகவினர் இருப்பதாக குற்றச்சாட்டு.


தருமபுரி, மார்ச் 18:


தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும், அரசு போக்குவரத்து பணிமனைகளில் திமுகவினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி சுமார் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பேருந்து நிலையங்களில் உள்ள நேரம் காப்பாளர் அறைகள் உள்ளிட்ட பகுதிகளில், திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகள், பணிக்கு செல்லாமல் அங்கு தொடர்ந்து இருப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் (அதிமுக, பாஜக, பாமக, அமமுக) சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.


இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுவை செலுத்தி சென்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies