தருமபுரி, மார்ச். 31:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி இன்று தொகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பாலக்கோடு தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் 5 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் பிரச்சார திட்டங்கள், வாக்காளர் தொடர்பு வலுப்படுத்தல், பூத் வாரியான அமைப்பு மேம்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

