Type Here to Get Search Results !

தருமபுரியில் 24x7 செயல்படும் ஊடக கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் சதீஸ் ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி – மார்ச் 17:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறுவதையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முல்லை கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு (MCMC) மையத்தில், தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் ஒளிபரப்புகளை கண்காணிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த மையம் தேர்தல் காலத்தில் 24 மணி நேரமும் (24x7) செயல்படும் வகையில் அமைக்கப்பட்டு, ஊடகங்களில் வெளியாகும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், செய்தி ஒளிபரப்புகள் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த கண்காணிப்பு பணிகள் தடையின்றி நடைபெற சுழற்சி முறையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies