தருமபுரி – மார்ச் 17:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 தொடர்பாக, தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த நாளில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
இந்த கட்டுப்பாட்டு அறையில்:
ஒரே நேரத்தில் 5 அழைப்புகள் பெறும் வசதி உள்ளது
அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்
புகார் அளிக்கும் வழிகள்
பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்து கீழ்க்கண்ட வழிகளில் புகார் அளிக்கலாம்:
📞 கட்டணமில்லா எண்: 1800 425 7017
📱 WhatsApp: 94439 47017
📧 மின்னஞ்சல்: controlroomdpi@gmail.com
📲 C-Vigil App மூலம் புகைப்படம்/வீடியோ இணைத்து புகார் அளிக்கலாம்
தொகுதி வாரியாக கட்டுப்பாட்டு அறை எண்கள்
பாலக்கோடு: 04348-222045
பென்னாகரம்: 04342-255636
தருமபுரி: 04342-260038
பாப்பிரெட்டிப்பட்டி: 04346-246544
அரூர் (தனி): 04346-221400
வாக்காளர்களுக்கு வேண்டுகோள்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தல் எந்தவிதமான முறைகேடுகளும் இன்றி நடைபெற தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், ஜனநாயக கடமையை உணர்ந்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)