Type Here to Get Search Results !

“என் வாக்கு என் உரிமை” – தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் ரங்கோலி மூலம் விழிப்புணர்வு.


தருமபுரி, மார்ச் 27:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவ, மாணவியர்கள் ரங்கோலி கோலம் வரைந்து “என் வாக்கு என் உரிமை” என்ற கருத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் இன்று (27.03.2026) நேரில் பார்வையிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம், “என் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற உறுதியை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், மாணவர்கள் “என் வாக்கு என் உரிமை”, “வாக்களிப்போம்” போன்ற வாசகங்களுடன் அமைக்கப்பட்ட செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வை பரப்பினர். அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.


இதனுடன், “என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்தல் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ரோபோட் மூலம் வாக்களிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட அலுவலர் திரு சு. சுந்தர்ராஜன், தருமபுரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி இரா. காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு வெ. லோகநாதன், வட்டாட்சியர் திரு ஜெ. சுகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies