Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணிக்கு வீராங்கனை தேர்வு வரும் மார்ச் 29 அன்று நடைபெறவுள்ளது.


தருமபுரி, மார்ச் 27:


தருமபுரி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 11 முதல் 14 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாவட்டங்களுக்கிடையிலான ஜூனியர் பெண்கள் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ளும் வகையில், தருமபுரி மாவட்ட அணியை தேர்வு செய்யும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு முகாம், வரும் மார்ச் 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் பேகராஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானம் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் வீராங்கனைகள் 01.01.2007க்குப் பிறகு பிறந்தவர்களாகவும், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், ஆதார் அட்டை கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை ஹாக்கி யூனிட் ஆப் தருமபுரி தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 6381107105, 8122784785, 9843934387 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies