Type Here to Get Search Results !

தேர்தல் பறக்கும் படையால் தருமபுரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ரூ.6.66 லட்சம் பறிமுதல்.


தருமபுரி – மார்ச் 21:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் (SST) தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் (19.03.2026 காலை 6.00 மணி முதல் 20.03.2026 காலை 6.00 மணி வரை) ரூ.6,66,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தொகுதி வாரியாக பறிமுதல் விவரம்:

  • பாலக்கோடு (57): ₹2,84,000
  • பென்னாகரம் (58): ₹3,20,000
  • அரூர் (61): ₹62,000
  • தருமபுரி (59), பாப்பிரெட்டிப்பட்டி (60): பறிமுதல் இல்லை


மொத்தமாக ரூ.6,66,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மதுபானம், போதைப்பொருட்கள், விலைமதிப்புள்ள உலோகங்கள் அல்லது இலவச பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும், இந்த காலப்பகுதியில் எந்த FIR-மும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி அதிகளவு பணம் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies