Type Here to Get Search Results !

தருமபுரி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு தாய்ப்பால் தானம் வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி, ஏப்ரல். 29:


தருமபுரி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கிக்கு மை தருமபுரி அமைப்பின் மூலம் தாய்ப்பால் தானம் வழங்கப்பட்டு சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது. நல்லம்பள்ளி அருகே குடிப்பட்டியை சேர்ந்த ஜோதிமணி – தையலாஸ்ரீ தம்பதியினர் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்தனர். குழந்தை பிறந்த பின்னர் தாயான தையலாஸ்ரீக்கு அதிகளவில் தாய்ப்பால் சுரந்ததால், அதை சேகரித்து தானமாக வழங்க முன்வந்தார்.


இதற்காக மை தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்ட அவர்கள், சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை அந்த அமைப்பின் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தாய்ப்பாலை மருத்துவமனைக்கு வழங்கினர். இந்த தாய்ப்பால், தாயில்லாத குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் கிடைக்காத புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.


மேலும், தாய்மார்கள் தங்களுக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை வீணாக்காமல் சேகரித்து தானமாக வழங்க முன்வர வேண்டும் என்றும், இதன் மூலம் பல குழந்தைகளின் உயிரைக் காக்க முடியும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies