Type Here to Get Search Results !

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம்: மத்திய அமைச்சர் சோமன்னா நடவடிக்கை.


தருமபுரி – மார்ச் 19:


அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பொம்மிடி ரயில் நிலைய திறப்பு விழாவையொட்டி, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா அவர்கள் மார்ச் 1, 2026 அன்று பொம்மிடி வருகை தந்திருந்தார். அப்போது, பொம்மிடி பகுதி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில், முக்கிய ரயில்களுக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இதன்படி,

  • மைசூர் எக்ஸ்பிரஸ் (16315/16316) – பெங்களூரு பயண வசதிக்காக

  • கோவை எக்ஸ்பிரஸ் (12675/12676) – கோயம்புத்தூர் பகல் நேர பயணத்திற்காக

  • திருவனந்தபுரம் மெயில் (12623/12624) – சென்னை அதிகாலை பயணத்திற்காக

  • நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339/16340) – தென் மாவட்டங்களுக்கு பயண வசதிக்காக


இந்த ரயில்களுக்கு பொம்மிடியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.


இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் சோமன்னா அவர்கள், சங்க செயலாளர் பா. ஜெபசிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைக்காக பொம்மிடி ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies