தருமபுரி - மார்ச் 08
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஆ . மணி எம்பி தலைமையில் கட்சி அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின் 6 - ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்துவியும் மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில் நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், நகர துணைச் செயலாளர் வ. முல்லைவேந்தன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, கழக பேச்சாளர் டி .ஏ. ரவி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரஹீம், ஒன்றிய செயலாளர்கள் காவேரி, சண்முகம், இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன், வெல்டிங் ராஜா, மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.
.gif)

