ஒகேனக்கல், மார்ச். 08:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது, அந்த வகையில் தற்போது ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியாக மசாஜ் செய்ய ஏதுவாக தனி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி உள்ளிட்டவர்கள் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த மசாஜ் சென்டரை திறந்து வைத்தனர்
ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.gif)

