Type Here to Get Search Results !

ஒகேனக்கல்லில் மகளிர் சுய உதவிக் குழு பொருட்கள் விற்பனைக்கு ‘மதி அங்காடி’-யை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.


தருமபுரி, மார்ச் 8:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், ஒகேனக்கல் பகுதியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் ‘மதி அங்காடி’யை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (07.03.2026) திறந்து வைத்தார்.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) / மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா மேம்பாட்டு தளத்தில் இந்த மதி அங்காடி ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.


இந்த அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் சிறுதானியங்கள், சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், சணல் பைகள், கோரைப் பைகள், கால்மிதியடிகள், தேன், பூஜை பொருட்கள், மசாலா பொருட்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும், ஒகேனக்கல் சுற்றுலா மேம்பாட்டு தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மசாஜ் செய்யும் மையம் அமைக்கப்பட்டு, அதை மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்பு திறந்து வைத்திருந்தார். அந்த மையத்தை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக இன்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


இதனை தொடர்ந்து பென்னாகரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பென்னாகரம் செயற்பொறியாளர் புதிய அலுவலக கட்டடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், பென்னாகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வீரமணி, மேற்பார்வை பொறியாளர் கோமகள், செயற்பொறியாளர்கள் பூவரசு (பென்னாகரம்), சோபனாதேவி (தருமபுரி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies