பென்னாகரம், பிப். 03:
உலக ஈரநிலம் தினத்தை முன்னிட்டு, பென்னாகரம் வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இராஜாவூர் பள்ளியில் பாரத சாரண-சாரணிய சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கான களப்பயணம் நடைபெற்றது.
இந்த களப்பயணத்தை பள்ளி தலைமை ஆசிரியர் எல்லம்மாள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர்கள் அருகிலுள்ள ஏரிக்கு சென்று, அங்கு ஈரநிலங்களின் முக்கியத்துவம், நீர்வள பாதுகாப்பு மற்றும் உயிரியல் பல்வகைமை குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர்.
கணித ஆசிரியர் சியாமளா கௌரி அவர்கள், உலக ஈரநிலம் தினத்தின் அவசியம், ஈரநிலங்கள் நீர்சுழற்சியில் வகிக்கும் பங்கு, நிலத்தடி நீர் பாதுகாப்பு போன்றவற்றை மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து, ஏரிக்கரையில் குழிகள் தோண்டி பனை விதைகள் நடவு செய்யப்பட்டு, மரங்களின் அவசியம் மற்றும் அவை எவ்வாறு ஈரத்தன்மையை தக்கவைக்க உதவுகின்றன என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
இயற்கை பாதுகாப்பு குறித்த கருத்துகளை சாரண பாடல்கள் மூலம் மாணவர்களுக்கு உற்சாகமாக எடுத்துரைத்தனர். இந்த களப்பயணத்தை சாரண ஆசிரியர் சந்தோஷ்குமார் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியைகள் கலைச்செல்வி, ஜோதி, சுகந்தி உள்ளிட்டோர் மற்றும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு, இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து உற்சாகமாக பங்கேற்றனர்.
.gif)

.jpg)