பென்னாகரம், பிப். 03:
அதிமுக சார்பில், மாண்புமிகு முன்னாள் முதல்வர், திராவிட இயக்கத்தின் போர்வாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினம் பென்னாகரத்தில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, பென்னாகரம் தெற்கு ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு, அதிமுக விவசாய பிரிவு தலைவர் மற்றும் முன்னாள் மாநில அம்மா பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், அதிமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.அன்பு, நகர செயலாளர் பி.எம்.சுப்பிரமணியம், மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேசன், முஸ்தபா, ஒன்றிய, நகர மற்றும் கிளை பொறுப்பாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
.gif)

.jpg)