பாப்பாரப்பட்டி | பிப்ரவரி 03:
மூக்கனஅள்ளி கிராமத்தில், பாப்பாரப்பட்டி அருகே புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ பூந்தோட்ட தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா பௌர்ணமி திதி, பூசம் நட்சத்திரம், சித்தயோகம் என்ற சுபயோகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, கடந்த தை மாதத்தில் கணபதி பூஜை, ரக்ஷாபந்தனம், திருக்கொடியேற்றம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நாளன்று மங்கள இசை, தீர்த்தக்குடம் எடுத்தல், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி–லட்சுமி–நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜைகள், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை, கோபுர கலச பிரதிஷ்டை ஆகியவை முறையாக நடத்தப்பட்டன.
மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க ஸ்ரீ பூந்தோட்ட தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் வெங்கடேஸ்வரன், பச்சமுத்து கல்லூரி கல்வி நிறுவனத் தலைவர் பாஸ்கர் – சசிகலா, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மகேஷ்வரி பெரியசாமி, பூந்தோட்ட தர்மசாஸ்தா விழா குழுவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
.gif)

.jpg)