தருமபுரி | பிப்ரவரி 14:
தருமபுரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.செல்வம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியதாவது:
ஒரு தேசியக் கட்சியின் தலைவரை பொதுவில் உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாது எனக் கூறி இழிவுபடுத்தும் எங்கள் கழகத் தலைவர் அவர்களை ஒருமையில் பேசியிருப்பதும், சக நடிகரை பெண் என்றும் பாராமல் கண்ணியக் குறைவாக பேசியிருப்பதும் ஒழுங்கற்ற பொதுப் அரசியல் தலைவர்கள் நயமான நடத்தை அல்ல என்பதை வெளிப்படையாக தெரிவிக்க விரும்புகிறோம்.
பொதுவெளியில் இப்படி பெண்களைப் பற்றி கொச்சையாகப் பேசும் முன் தாங்கள் பொறுப்பு வகித்துவரும் மதவாதக் கட்சியில் கூட பெண்கள் உள்ளனர் என்பதை நினைவில் கொண்டு பேச வேண்டும். கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் சென்று இடமெல்லாம் எங்கள் தலைவர் அவர்களுக்கு கிடைக்கும் மக்கள் எழுச்சியை கண்டு, 20–30 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் செய்து நோடாவிற்கே கீழ் சென்று நிற்கும் நீங்கள் கவலைப்படுவதை கண்டு எங்களுக்கு புரிகிறது.
டெல்லியை மையமாக வைத்து தமிழகத்திலுள்ள ஓரளவான கட்சிகளை மிரட்டி அடிமையாக்கி வைத்து தமிழகத்தை காலனியாக விடலாம் என்று நீங்கள் காணும் பல கனவு தமிழக மக்களிடம் ஒருபோதும் நிறைவேறாது. இதுபோன்ற சகிப்பான விமர்சனங்களை நீங்கள் நிறுத்திக் கொள்ளாவிட்டால் எங்கள் கழகத் தலைவர் அவர்களை நேசிக்கும் கோடிக்கணக்கான தாய்மார்களும், தங்கைகளும் தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என்பதால் பதிலே கூற இயலாது.
இவ்வாறு தருமபுரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.செல்வம் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)