தருமபுரி | பிப்ரவரி 14:
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. விழாவையொட்டி மகா கணபதி, சுப்ரமணியர் மற்றும் அம்பாள் ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆதிஷேச வாகனத்தில் அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம், குண்ட பூஜை மற்றும் தீமிதி விழா நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரி சக்தி கரகம் ஏந்தி தீமிதித்து வழிபாட்டை தொடங்கினார். பின்னர் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சக்தி கரகத்துடன் வந்த பூசாரி நடந்து செல்வது வழக்கத்தின்படி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)