Type Here to Get Search Results !

தீர்த்தமலையில் TR கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் 300க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


தீர்த்தமலை, பிப். 02:


தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் TR கல்வி அறக்கட்டளை, தருமபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து, இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.


இந்த முகாமிற்கு TR கல்வி அறக்கட்டளை தலைவர் திரு. G. கிரிராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் திரு. G. ராஜேந்திரன்சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு. கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில், மலைவாழ் மக்கள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

அறுவை சிகிச்சை செய்யப்படும் பயனாளிகளுக்கு

  • போக்குவரத்து,

  • உணவு,

  • மருந்துகள்
    அனைத்தும் முழுமையாக இலவசமாக வழங்கப்படுவதாக அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த முகாமின் ஒருங்கிணைப்பில் TR கல்வி அறக்கட்டளை செயலாளர் திரு. துரைப்பாண்டியன்ஓய்வு பெற்ற கண் மருத்துவ உதவியாளர் திரு. கு. கலையரசன்முகாம் அலுவலர் விஜய் சங்கர்மருத்துவர்கள் மற்றும் ERK கல்லூரி செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர். இந்த இலவச கண்சிகிச்சை முகாம், கிராமப்புற மற்றும் மலைப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனளித்ததாக பொதுமக்கள் பாராட்டினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies