Type Here to Get Search Results !

விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – பிப்ரவரி 6-ஆம் தேதி தருமபுரியில் நடைபெறுகிறது.


தருமபுரி | பிப்ரவரி 03:


தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் வாரத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பிப்ரவரி 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 06.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற உள்ளது.


இந்த கூட்டத்தில், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் வேளாண்மை, பாசனம், பயிர் காப்பீடு, உரம், விதை, பயிர்கடன், மானியங்கள் உள்ளிட்ட துறை சார்ந்த குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். இதில் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு வருவாய் கோட்ட அலுவலர் திருமதி இரா. காயத்ரி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies