Type Here to Get Search Results !

தருமபுரியில் ஜே.சி.ஐ. விங்ஸ் அமைப்பின் கோகுல்ராஜ் புதிய தலைவராக தேர்வு; பதவி பிரமாண விழா கோலாகலமாக நடைப்பெற்றது.


தருமபுரி | பிப்ரவரி 2:


உலகின் 116 நாடுகளில் கிளைகள் கொண்ட சர்வதேச அமைப்பான ஜே.சி.ஐ (Junior Chamber International) யின் அங்கமான ஜே.சி.ஐ. விங்ஸ் அமைப்பு தருமபுரியில் தொடங்கப்பட்டது. இதனை முன்னிட்டு, தருமபுரி ஓட்டப்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.


இந்த நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. விங்ஸ் தருமபுரி அமைப்பின் புதிய தலைவராக கோகுல்ராஜ் நல்லதம்பி தேர்வு செய்யப்பட்டார். ஜே.சி.ஐ. மண்டலத் தலைவர் விஜய் கணேஷ் கலந்து கொண்டு புதிய அமைப்பை தொடங்கி வைத்து, கோகுல்ராஜ் நல்லதம்பிக்கு தலைவர் பதவிக்கான பிரமாணத்தை செய்து வைத்தார்.


மேலும், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தருமபுரி சார்பில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்மணி, தினேஷ் குமார், தொழிலதிபர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினர்களாக வர பிரசாத் மற்றும் தியாகராஜன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் பிரபாகரன், நிவேதினி உள்ளிட்ட ஜே.சி.ஐ. தருமபுரி விங்ஸ் நிர்வாகிகள், கூட்டணி அமைப்பினர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சி மூலம் தருமபுரியில் இளைஞர் தலைமையிலான தொழில், சமூக சேவை மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies