பென்னாகரம் | பிப்.06
ஏரியூர் அருகே உள்ள இராம கொண்ட அள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி – பூதேவி சமேத அருள்மிகு ஸ்ரீ சிங்கார பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு நேற்று காலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, மதியம் காவிரி ஆற்றிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, வான வேடிக்கைகள் முழங்க, மேளதாளங்கள் இசைக்க, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இந்த ஊர்வலம் பக்தர்களிடையே பெரும் பக்தி உற்சாகத்தை ஏற்படுத்தியது.
விழாவையொட்டி நேற்றும் இன்றும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த மஹா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.
Permalink:
.gif)

.jpg)