Type Here to Get Search Results !

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; இதனால் 5,330 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


தருமபுரி – பிப்ரவரி 05:


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள தொப்பையாறு நீர்த்தேக்கம்-இலிருந்து விவசாய நிலங்கள் பாசனத்திற்காக இன்று (05.02.2026) தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் தண்ணீர் திறந்து வைத்தனர்.


ஆயக்கட்டுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகளில் 2,050 ஏக்கர் மற்றும் சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகளில் 3,280 ஏக்கர் என மொத்தம் 5,330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில், இன்று முதல் 48 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தின் தொப்பூர், கம்மம்பட்டி கிராமங்களும், சேலம் மாவட்டத்தின் செக்காரப்பட்டி, வெள்ளார், தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம் ஆகிய 6 கிராமங்களின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அறிவிக்கப்பட்ட 4 நனைப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து 8 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, எக்காரணத்தையும் கொண்டு கூடுதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் கீருபா, உள்ளிட்ட அலுவலர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies