Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.


தருமபுரி, பிப். 21:


தருமபுரி அருகே பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் Periyar University PG and Research Centre Dharmapuri-யில் வணிகவியல் துறை சார்பாக “டிஜிட்டல் மாற்றத்திற்கான பங்கு” என்ற தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் குமரேசன், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலைக்கல்லூரி இயக்குனர், முனைவர் கிருஷ்ணகுமார், பெரியார் பல்கலைக்கழகம் சேலம் பேராசிரியர், முனைவர் சிலம்பரசன், குளோபல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ், பெங்களூரு பேராசிரியர், மற்றும் முனைவர் பாலசுப்ரமணியன், ஜெயின் கல்லூரி, கேரளா பேராசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினர்.


தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 350 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கருத்தரங்கு நோக்குரை துறைத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மோகனசுந்தரம் வழங்கினார். இயக்குநர் பொறுப்பு முனைவர் செல்வபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் முகுந்தன் நன்றியுரை வழங்கினார். முனைவர் மயில்சாமி மற்றும் முதலாம், இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


டிஜிட்டல் மாற்றம் வணிகத் துறையில் ஏற்படுத்தும் தாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம், ஆன்லைன் வணிக மேலாண்மை மற்றும் நவீன சந்தைப்படுத்தல் முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies