தருமபுரி, பிப்.21:
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் செட்டிக்கரை வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (20.02.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதேமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெங்கடனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் பள்ளகொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
வாக்குச்சாவடி மையங்களில் கழிவறை வசதி, குடிநீர், மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீராக உள்ளனவா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மைய பணிகளை பார்வையிட்டு, தேவையான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)