Type Here to Get Search Results !

மொரப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


மொரப்பூர், பிப்.21:


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மொரப்பூர் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் 24.02.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மொரப்பூரில் நடைபெற உள்ளது. இம்முகாமை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.


பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை (NIDC), இலவச அறுவை சிகிச்சை, உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்ய இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழிப்புணர்வு செய்யப்பட்டது.


இவ்விழிப்புணர்வு பேரணியை மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) திருமதி ஆர். கலைச்செல்வி, மொரப்பூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) திரு கே. மேகநாதன், IE ஒருங்கிணைப்பாளர் திருமதி வி. சாரதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணியில் சுமார் 50 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies