தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நத்தஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த அனுமந்தன் என்பவர், மாடு மேய்த்து கொண்டிருந்த போது, அந்த மாடு அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் மற்றும் முத்துசாமி ஆகியோரின் நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதை காரணமாகக் கொண்டு, மேற்படி இருவரும் அனுமந்தனை திட்டி, கையால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அனுமந்தன், கடந்த 09.02.2026 அன்று மாலை 05.30 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாக, இன்று (10.02.2026) அவரது மனைவி இண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், இண்டூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 37/2026ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அனுமந்தனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் பென்னாகரம் – தருமபுரி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது இண்டூர் காவல் நிலைய குற்ற எண் 38/2026ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.
.gif)

