தருமபுரி | பிப்ரவரி 11 :
தருமபுரி மாவட்டத்தில் பெயர் பதிவில்லாமல் வழங்கப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழ்களில் குழந்தையின் பெயரை பதிவு செய்து திருத்திய பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசம் 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:
-
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள், பெயருடன் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெறலாம்.
-
பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு–இறப்பு பதிவாளரிடம் அளித்து இலவசமாக பெயர் பதிவு செய்யலாம்.
-
1 ஆண்டுக்கு மேல் பெயர் பதிவு செய்யாதவர்கள், உரிய தாமதக் கட்டணம் செலுத்தி 15 ஆண்டுகளுக்குள் பெயரை பதிவு செய்து சான்றிதழ் பெறலாம்.
-
ஒருமுறை குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்ட பின், எந்த காரணத்திற்கும் மாற்ற இயலாது.
மேலும், 01.01.2000-க்கு முன் மற்றும் பின் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கும், பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்வதற்கான இந்த சிறப்பு கால அவகாசம் 26.09.2026 வரை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்:
-
ஊராட்சிகள்: கிராம நிர்வாக அலுவலர்
-
நகராட்சி / பேரூராட்சி: துப்புரவு ஆய்வாளர்
-
அரசு மருத்துவமனை / அரசு மருத்துவக் கல்லூரி / அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: சுகாதார ஆய்வாளர்
பெயர் பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)