Type Here to Get Search Results !

தருமபுரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: ரூ.1.03 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தருமபுரி, ஏப்ரல். 15:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 நடைபெறவுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 24 மணி நேரத்தில் (14.04.2026 மாலை 6.00 மணி முதல் 15.04.2026 மாலை 6.00 மணி வரை) பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனைகளில் ரூ.1.03 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலின்படி, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் ஒரு வழக்கில் ரூ.40,300 பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அரசியல் கட்சிகளின் பெயர்கள் அச்சிடப்பட்ட துவால்கள் (அதிமுக – 25, பாமக – 25, பாஜக – 5) ரூ.1,650 மதிப்பில் கைப்பற்றப்பட்டன. அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஒரு வழக்கில் ரூ.62,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் அரூர் (தனி) தொகுதிகளில் எந்தப் பறிமுதல் சம்பவங்களும் பதிவாகவில்லை.


மொத்தமாக 3 வழக்குகளில் ரூ.1,03,950 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை எந்த எஃப்ஐஆர் பதிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதைத் தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.


தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies