Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்; 50 பேர் கைது செய்யப்பட்டனர்.


பென்னாகரம் | பிப்ரவரி 13:


பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டத் தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தார். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகைக்கு இணையாக, தமிழகத்திலும் குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


பேருந்து நிலைய நுழைவாயிலின் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் மற்றும் 28 ஆண்கள் என மொத்தம் 50 மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies