தருமபுரி | பிப்ரவரி 13:
தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டை மேம்படுத்தவும் பாதுகாக்கவும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கலைமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மன்றங்கள் வாயிலாக கலைஞர்களுக்கு அரசின் நல உதவிகள், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு வாய்ப்பு, பயணச் சலுகை உள்ளிட்ட பலன்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
-
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகம்
-
நாதசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவி கலைஞர்கள்
-
கரகம், காவடி, பொய்கால் குதிரை, அரசன்-அரசி ஆட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட கிராமியக் கலைகள்
-
முழுநேரம் அல்லது பகுதி நேரமாக நிகழ்த்துக் கலை மற்றும் கவின்கலை செய்து வரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
-
கலை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
-
கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் கலை அனுபவச் சான்று
-
பாராட்டுச் சான்றிதழ்கள்
-
கலை நிகழ்ச்சி விளம்பர நோட்டீஸ்
-
வயது மற்றும் இருப்பிட ஆதாரங்கள்
-
மார்பளவு புகைப்படங்கள்
-
உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100/-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
தகுதியும் விருப்பமும் உள்ள கலைஞர்கள் மேலே குறிப்பிட்ட அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)