Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி 12வது வார்டு முத்து கவுண்டர் தெருவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.


பாலக்கோடு, பிப்.24:
 


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 12வது வார்டு முத்து கவுண்டர் தெருவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திமுக மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் பி.எல்.ரவி, அவைத் தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பொதுமக்களுக்கு சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதுடன், 20 லிட்டர் தண்ணீரை ரூ.5க்கு வழங்கும் நோக்கில் பாலக்கோடு பேரூராட்சி சார்பில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலைய அமைப்புப் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொதுமக்கள் இந்நிலையத்தின் மூலம் தரமான குடிநீர் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, வார்டு கவுன்சிலர்கள் சரவணன், நாகலட்சுமி, லட்சுமிராஜசேகர், ரூஹித், அயிஷாமசியுல்லா, பத்தேகான், கிளை செயலாளர்கள் சரவணன், ராஜீ, வடிவேல், மோகன், நிர்வாகிகள் சக்திவேல், பெரியசாமி உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies