Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்; “அரோகரா” முழக்கத்தில் பக்தர்கள் பக்தி பரவசம்.


பாலக்கோடு, பிப். 20 :
 


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வட்டகாணம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கிய விழா, இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம் மற்றும் வேதபாராயணம் முழங்க பூர்ணாஹுதி நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித கலச தீர்த்தக் குடங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்களது தலைமீது எடுத்து வந்து, கோயில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கலசத்திற்கு ஊற்றப்பட்ட புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீபாலதண்டாயுதபாணிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து, பூக்களால் சிறப்பாக அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீபாலதண்டாயுதபாணியை காண ஏராளமான பக்தர்கள் “அரோகரா, அரோகரா” என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.


விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா வீரபத்திரன், ஊர் கவுண்டர்கள் அனுமந்தன், பன்னீர்செல்வம், வட்டகாணம்பட்டி மற்றும் ரங்கம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies