பாலக்கோடு, பிப்.08:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபுதூர்மாரியம்மன் கோயில் 58-ம் ஆண்டு திருவிழா, பாரம்பரிய முறையில் மாசிமாத பெளர்ணமியை முன்னிட்டு வரும் பிப்ரவரி 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் ஸ்ரீபச்சியம்மன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவிற்கு ஊர் கவுண்டர் முருகேசன் தலைமையிலான குழுவினர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஸ்ரீபுதூர்மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடிமரத்திற்கு விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் செய்து, பாரம்பரிய முறைப்படி கொடிமரம் நாட்டி கொடி ஏற்றி திருவிழாவை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பனங்காடு மந்திரி கவுண்டர் பெரியசாமி, தர்மகர்த்தா இளங்கோ, 6 கோம்பு தலைவர்களான ராஜா, முருகேசன், கணேசன், ராஜா, ஆறுமுகம், குப்பன், தொட்டம்பட்டி ஊர் கவுண்டர் கருப்பண்ணன், மந்திரி கவுண்டர் முனியப்பன், ஸ்ரீபச்சியம்மன் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் குமார், கௌரவ தலைவர் ராஜா, நிர்வாகி முத்துராஜ், செயலாளர் பச்சியப்பன், பொருளாளர் முனியப்பன் சௌந்தர், துணை செயலாளர் அர்ஜூனன், இணை செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர்கள் சின்னபெருமாள், சின்னசாமி, முன்னாள் தலைவர் பெருமாள், 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.
.gif)

