Type Here to Get Search Results !

மொரப்பூர் ஒன்றியம், இராணிமூக்கனூர் ஊராட்சியில் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் தடை – பொதுமக்கள் அவதி.


மொரப்பூர், பிப். 08:


மொரப்பூர் ஒன்றியம்க்கு உட்பட்ட இராணிமூக்கனூர் ஊராட்சியில், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த இரண்டு தினங்களாக தடைபட்டுள்ளது.


இதனால், இந்த ஊராட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். குடிநீர் கிடைக்காத காரணத்தால், பொதுமக்கள் வெளியிடங்களில் இருந்து பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


இந்த குடிநீர் தடை தொடர்பாக மாவட்ட ஆட்சி அலுவலகத்தின் 1077 உதவி எண்ணை தொடர்புகொண்டபோது, ஊராட்சி செயலாளரை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


அதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர் திரு. விக்ரம் அவர்களை தொடர்புகொண்டபோது,

“நாங்கள் தற்போது பணி நிறுத்தத்தில் உள்ளோம். இதனை மாவட்ட ஆட்சி அலுவலகத்திலேயே தெரிவித்து சரி செய்து கொள்ளுங்கள்”

என்று கூறியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதையடுத்து மீண்டும் 1077 உதவி எண்ணை தொடர்புகொண்டு இதுகுறித்த தகவலை தெரிவித்தபோது,


“மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசுகிறோம்”


என்று கூறி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் இல்லாமல் தவித்து வரும் இராணிமூக்கனூர் ஊராட்சி கிராமப் பொதுமக்கள்,


“குடிநீர் விநியோகம் எப்போது சீராகும்?”


என்ற கேள்வியுடன் அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies